பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் குர்து கலாச்சார மையம் மற்றும் சலூனில் 69 வயது நபர் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டதில் 3 பேர் உயிரிழந்தனர்.
சலூனில் பதுங்கியிருந்த கொலையாளியை போலீஸார் கைது செய்தனர். பிரெஞ்ச் நாட்டைச் சேர்ந்த அவர், ஏற்கனவே 2016 மற்றும் 2021ம் ஆண்டுகளில் கொலை முயற்சியில் ஈடுபட்டவர் என கூறப்படுகிறது.
கடந்த 2015ம் ஆண்டு முதல் பாரீஸில் தீவிரவாத தாக்குதல்கள், குழு மோதல்கள் அடிக்கடி நடைபெறுவதால் பீதி நிலவி வருவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.