சென்னை ராஜா அண்ணாமலை புரத்தில் உள்ள பிரபல நடிகை கனகா வீட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
சென்னை ராஜா அண்ணாமலை புரம், முதலாவது தெருவில் நடிகை கனகா வசித்து வருகிறாா். பழம்பெரும் நடிகை தேவிகாவின் மகளான இவா், ‘கரகாட்டக்காரன்’, ‘அதிசய பிறவி’, ‘கும்பக்கரை தங்கய்யா’, ‘தாலாட்டு கேக்குதம்மா’, ‘சாமுண்டி’, ‘கோயில் காளை’ உள்ளிட்ட ஏராளமான படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளாா்.
இந்நிலையில், இவரது வீட்டிலிருந்து நேற்று பிற்பகல் திடீரென கரும்புகை வெளியேறியது. இதைப் பாா்த்த அந்தப் பகுதி மக்கள், தீயணைப்புத் துறைக்குத் தகவல் தெரிவித்தனா். மயிலாப்பூா், தேனாம்பேட்டை தீயணைப்புப் படையினா் சம்பவ இடத்துக்கு வந்து, தீயை அணைத்தனா்.
இது குறித்து அபிராமபுரம் போலீசார் நடத்திய விசாரணையில், கனகா வீட்டில் பூஜை அறையில் எரிந்த விளக்கு கீழே விழுந்து, அருகில் இருந்த துணிகள், பொருள்களில் தீ பரவியதும் தெரியவந்தது. தீ விபத்தில் யாருக்கும் பாதிப்பில்லை. பூஜை அறையில் இருந்த பொருள்கள் மட்டும் எரிந்து சேதமானது. இது தொடர்பாக போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.