டெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நேற்றுடன் நிறைவடைவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று மாநிலங்களவையும் நிறைவடைதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. கூட்டர்தொடர் முடிய 29ந்தேதி வரை அவகாசம் உள்ள நிலையில், மக்களவையை தொடர்ந்து மாநிலங்களவையும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர், கடந்த 7ம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. இந்த கூட்டத்தொடர் டிச.29ம் தேதி வரை நடைபெற இருந்த நிலையில், நேற்றுடன் மக்களவை முன்கூட்டியே ஒத்திவைப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. நான்கு நாட்கள் முன்னதாகவே குளிர்கால கூட்டத்தொடர் நிறைவு பெற்றுள்ளது வியப்பை ஏற்படுத்தியது. இருந்தாலும் நடப்பு கூட்டத்தொடரில் மக்களவை 97% ஆக்கப்பூர்வமாக செயல்பட்டது என சபாநாயகர் ஓம்பிர்லா தெரிவித்து உளளார்.
இந்த நிலையில், மக்களவையை தொடர்ந்து இன்று மாநிலங்களவை கூட்டத்தொடரும் முன்கூட்டியே தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. ராஜ்யசபா கால அட்டவணைக்கு ஏழு நாட்களுக்கு முன்னதாக ஒத்திவைக்கப்பட்டது.
புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர், மாநிலங்களவைத் தலைவராகப் பதவியேற்ற முதல் முழு அமர்வு இதுவாகும். ஜக்தீப் தன்கர் கூறுகையில், கிறிஸ்மஸ், பொங்கல், லோஹ்ரி மற்றும் பிற பண்டிகைகள் உட்பட வரவிருக்கும் விழாக்களுக்கு சபை உறுப்பினர்களுக்கு தலைவர் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். மேலும் அதிகரித்து வரும் கோவிட் தொற்றுநோய்கள் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும் மற்றும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று பரிந்துரைத்தார். எனவே, நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.