பாரிஸ் ஐரோப்பிய நாடான பிரான்ஸ் தலைநகர் பாரிசில் குர்திஷ் சமூகத்தினரின் கலாசார மையம் உள்ளது. இங்கு, நேற்று நுழைந்த 69 வயது முதியவர் ஒருவர், திடீரென துப்பாக்கியால் சுட்டார்.
இதில், மூன்று பேர் பலியாகினர்; மூன்று பேர் படுகாயம் அடைந்தனர்.தாக்குதல் நடத்திய முதியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேயர் அலெக்சாண்ட்ரா கூறுகையில், ”இந்த தாக்குதலுக்கான காரணம் முழுமையாக தெரியவில்லை. ஆனால், அப்போது கூட்டத்தில் இருந்தவர்கள் துருக்கி அரசு மற்றும் அந்நாட்டு ஜனாதிபதிக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்,” என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement