பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கட்டியுள்ள ரபேல் வாட்ச் விலை குறித்து தற்போது பரவலாக பேசப்பட்டுவருகிறது. பல்வேறு அரசியல்வாதிகளின் செய்தியாளர் சந்திப்பிலும்கூட இது குறித்து கேள்விகள் எழுப்பப்படுகின்றன. சமூக வலைத்தளங்களில் பாஜகவின் எதிர்க்கட்சியினர் பலரும் ரபேல் வாட்ச் விவகாரம் குறித்து அவர்களது கருத்துக்களையும் மீம்ஸ்களையும் பகிர்ந்து வருகின்றனர். இதற்கான ரசீது கேட்டு பல்வேறு அரசியல்வாதிகளும், சமூக வலைதளவாசிகளும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையும் அதற்கான ரசீது தன்னிடம் உள்ளதாகவும் தெரிவித்து வருகிறார். மேலும் இந்த வாட்ச் வைத்து எம்பிக்களை பெற்று விட முடியும் என கோவையில் அவர் பேசியதும் தற்போது பேசுபொருளாகி உள்ளது.
சத்திரபதி சிவாஜி 1967ல் சென்னை வந்தார்.
37 வயதுக்குள் படித்தது 20000 புத்தகம்.
கணுக்கால் தண்ணீரில் டைட்டானிக் ட்ராமா.
9 வருட சர்வீஸில் 2 லட்சம் கேஸ்.
4 ஆடு வளர்த்து 5 லட்சம் வாட்ச்.
இன்று, ரூ.345/- மெஷின் 10,000 ரூபாய்.
ஐம்புலன்களிலும் பெரும் பொய்களே.. #காதுகள்பாவமில்லையா
— V.Senthilbalaji (@V_Senthilbalaji) December 22, 2022
இந்நிலையில் கோவை மாவட்ட பெரிய கடைவீதி திமுக சார்பில் உக்கடம், லங்கா கார்னர் என மாநகர பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதில் வாட்ச் ஒன்றை பெரியதாக அச்சிட்டு “டிக்..டிக்..டிக் பயந்துட்டியா… மல” என அண்ணாமலையின் பெயரை கூறாமல் மறைமுகமாக சுட்டிக்காட்டியுள்ளனர்.
பில் இருக்கிறதா? இல்லையா என்று ஒரே ஒரு கேள்விதான் கேட்கிறோம். ஆம்/இல்லை என்பதுதானே பதிலாக இருக்க முடியும்?
ஏப்ரலில் பட்டியல் வரும்…மே மாதம் வெய்யில் அடிக்கும் என்று எல்லாம் அளப்பதைப் பார்த்தால் ‘அன்னைக்கு காலையில் 6 மணி இருக்கும்…கோழி கொக்கரக்கோன்னு…’ என்பது போலவே இருக்கிறது.
— V.Senthilbalaji (@V_Senthilbalaji) December 20, 2022
இந்த போஸ்டரின் புகைப்படம் தற்போது வைரலாகியுள்ளது.