மத்திய அரசு நாடாளுமன்றத்தில் அளித்துள்ள பதிலில், ராமர் பாலம் இருந்ததாக திட்டவட்டமாக கூற முடியாது. இஸ்ரோ செயற்கைக்கோள் மூலம் ஆய்வு செய்ததில் பாலம் இருந்தது என துல்லியமாக கூற முடியவில்லை. ராமேஸ்வரம் – தலைமன்னார் இடையே உள்ள திட்டுக்களை சிதைந்த பாலத்தின் பகுதி என்றோ, மிச்ச சொச்சம் என்றோ கூற முடியாது. 18 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு என்பதால் ராமர் பாலம் பற்றிய தகவல்களை கண்டறிவதில் சிக்கல்கள் இருக்கின்றன. 56 கிலோமீட்டர் நீளத்துக்கு பாலம் இருந்ததாக நாம் கருதுகிறோம். உண்மையில், அங்கு இருந்த சரியான கட்டமைப்பை குறிப்பிடுவது கடினம். அந்த கட்டமைப்புகள் இருந்ததற்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஏதோ ஒரு அறிகுறி இருக்கிறது என்று தெரிவித்துள்ளது.