ராமேஸ்வரம் : பாம்பன் ரயில் பாலத்தில் சென்னை ஐஐடி நிறுவனம் பொருத்திய கண்காணிப்பு கருவி ரயில்கள் ஓடும்போது பாலத்தில் அதிர்வுகள் அதிகமாக இருப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக ராமேஸ்வரம் மண்டபம் ரயில் நிலையங்களுக்கு இடையே போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ராமேஸ்வரத்தில் இருந்து இன்று (23.12.22) மாலை 06.00 மணிக்கு புறப்படும் மதுரை விரைவு ரயில் (06656) முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. இன்று ராமேஸ்வரத்தில் இருந்து முறையே மாலை 04.20 மணி, 05.20 மணிக்கு மற்றும் இரவு 08.20 மணி, 10.30 மணிக்கு புறப்படும் திருப்பதி, சென்னை எழும்பூர் (மெயின் லைன், கார்ட் லைன் ரயில்கள்), ஓஹா விரைவு ரயில்கள் ஆகியவை மண்டபம் ரயில் நிலையத்திலிருந்து இயக்கப்படும்.