ஹைதராபாத்: திடீரென 100 மீட்டர் தூரத்திற்கு உடைந்து நொறுங்கிய பாதாள சாக்கடை! வீடியோ

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் திடீரென்று பாதாள சாக்கடை உடைந்து விழுந்ததில், பாதாள சாக்கடை மீது நிறுத்தப்பட்டிருந்த கார்கள், இருசக்கர வாகனங்கள் சேதமடைந்துள்ளன.
தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் உள்ள கோஷ் மஹால் பகுதியில் அமைந்திருக்கும் பாதாள சாக்கடை மீது பொதுமக்கள் தங்கள் வாகனங்களை நிறுத்தி செல்வது வழக்கம். இது தவிர சாக்கடை மீது போடப்பட்டிருக்கும் கான்கிரீட் மீது சிறு வியாபாரிகள், தள்ளுவண்டி வியாபாரிகள் ஆகியோர் தங்கள் வாகனங்களை நிறுத்தி பழங்கள், காய்கறிகள், பொம்மைகள் ஆகியவற்றையும் விற்பனை செய்து வந்தனர்.

இந்த நிலையில் பாதாள சாக்கடை திடீரென்று சுமார் 100 மீட்டர் தூரத்திற்கு உடைந்து நொறுங்கியது. இதனால் அதன் மீது நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள், விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பொருட்கள் ஆகியவை பாதாள சாக்கடைக்குள் விழுந்து சேதமடைந்தன. இந்த சம்பவத்தில் ஒரு சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

The #BJP MLA @TigerRajaSingh who follows #DoubleEngine Sarkar rules, practising it in his #Goshamahal constituency.

Look how disastrous it came out.@KTRTRS
pic.twitter.com/6EqLvhqyN4
— ARPITHA PRAKASH (@AJ_BRS) December 23, 2022

இன்று வெள்ளிக்கிழமை, ஆகையால் பொருட்களை வாங்க ஏராளமானோர் கோஷ் மஹால் பகுதிக்கு வந்திருந்தனர். இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று அங்கிருந்தவர்களை அப்புறப்படுத்தி, பாதாள சாக்கடைக்குள் விழுந்த வாகனங்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
மேலும் இடிபாடுகளுக்கு இடையே யாராவது சிக்கி கொண்டிருக்கிறார்களா என்று கண்டுபிடிக்கும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.