CBSE Date Sheet 2023: சிபிஎஸ்இ 10, 12-ஆம் வகுப்பு தேர்வு அட்டவணை எப்போது வெளியீடு?

CBSE 10 ஆம் வகுப்பு 12 ஆம் தேர்வு அட்டவணை 2023: CBSE தேர்வு அட்டவணை 2023 CBSE – cbse.gov.in இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்தகால போக்குகளின்படி, சிபிஎஸ்இ தேர்வு தேதிகள் பொதுவாக தேர்வுக்கு 45 முதல் 60 நாட்களுக்கு முன்பு வெளியிடப்படும். மாணவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விரிவான அட்டவணையை விரைவில் எதிர்பார்க்கலாம். முன்னதாக ஜனவரி 01, ஆம் தேதி 2023 முதல் ப்ராக்ட்டிகல்ஸ் தேர்வுகளுக்கான தேதிகளை வாரியம் அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில் மத்திய கல்வித்துறை மற்றும் சிபிஎஸ்இ கல்வி வாரியத்தின் தகவலின்படி சிபிஎஸ்இ 10ம் வகுப்பு இறுதித் தேர்வு 2023, பிப்ரவரி 16ம் தேதியும், 12ம் வகுப்பு இறுதித் தேர்வு பிப்ரவரி 15ம் தேதியும் வெளியிடப்படும்”எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 10ம் மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வு ஜனவரி 1ம் தேதி தொடங்குகிறது. அத்துடன் மாணவர்கள் சிபிஎஸ்இ கல்வி வாரியத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் மட்டுமே தேர்வு தேதி அட்டவணையை தெரிந்து கொள்ள வேண்டும் என்று அரசு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் 2022–2023 இல் சிபிஎஸ்இ போர்டு தேர்வுகளை எழுதும் மாணவர்கள், கல்வி வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து CBSE தேதித்தாள் 2023ஐ பதிவிறக்கம் செய்யலாம். 34 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் CBSE 10 ஆம் வகுப்பு மற்றும் 12 போர்டு தேர்வுகளை எழுத பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இவர்களில் சுமார் 18 லட்சம் மாணாக்கர்கள் 10 ஆம் வகுப்பிலும், 16 லட்சம் பேர் 12 ஆம் வகுப்புத் தேர்வுகளையும் எழுத உள்ளனர்.

முன்னதாக நடப்பு கல்வியாண்டின் தமிழக அரசின் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு தொடர்பான அட்டவணை தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் அண்மையில் வெளியிடப்பட்டது. ஆனால் சிபிஎஸ்இ பாடப்பிரிவுகளுக்கு இன்னமும் பொதுத்தேர்வுகள் தேதி அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.