Jio Happy new year 2023: ஜியோ புத்தாண்டு ரூ2023 திட்டம் அறிமுகம்!

புத்தாண்டு நெருங்கிவிட்டது என்பதால் பல நிறுவனங்கள் பலவகையான அதிரடி சலுகைகள் மற்றும் புதிய திட்டங்களை அறிமுகம் செய்துவருகின்றன. இதில் இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனமாக உள்ள ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ரூபாய் 2023 என்றே திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

இந்த புதிய திட்டம் 252 நாட்களுக்கு செல்லுபடி ஆகும். இந்த திட்டம் இப்போது Jio.com அல்லது Myjio ஆப் மூலம் பெறலாம். மேலும் இதை Google Pay மற்றும் PhonePe ஆகிய செயலி மூலமும் ரீசார்ஜ் செய்யலாம்.

ரூபாய் 2023 புத்தாண்டு திட்டம் (Happy New year 2023 plan)

இந்த புதிய திட்டம் 252 நாட்கள் மதிப்பு கொண்டுள்ளது. மொத்தமாக 9 மாதங்கள் இந்த திட்டத்தை நாம் பயன்படுத்தலாம். இதில் 2.5GB தினசரி டேட்டா கிடைப்பதால் இந்த திட்டம் முழுவதிலும் நமக்கு சுமார் 630GB டேட்டா மொத்தமாக கிடைக்கிறது.

இந்த திட்டத்தில் கூடுதலாக நமக்கு 100SMS வசதி, Jio Prime Membership போன்ற வசதிகள் கிடைக்கின்றன. இதைத்தவிர ஏற்கனவே இருக்கும் ரீசார்ஜ் திட்டங்களிலும் கூடுதல் சலுகைகளை அறிவித்துள்ளது.

2999 ரூபாய் திட்டம்

இந்த திட்டம் தற்போது இருப்பதை விட 75GB கூடுதல் டேட்டா, 23 நாட்கள் கூடுதல் நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளன. இந்த திட்டம் மொத்தமாக 365 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளது. இதில் ஒரு நாளைக்கு 2.5GB டேட்டா என மொத்தமாக நமக்கு 912.5GB டாட்டா, அன்லிமிடெட் காலிங், ஒரு நாளைக்கு 100SMS, Jio Apps வசதிகள் கிடைக்கின்றன.

ஜியோ நிறுவனம் மொத்தமாக மூன்று ஒரு வருட ரீசார்ஜ் திட்டங்கள் கொண்டுள்ளது (2,999 ரூபாய், 2874 ரூபாய், 2545 ரூபாய் ஆகிய திட்டங்கள்). தற்போது புத்தாண்டு காரணமாக அதன் 2,999 ரூபாய் திட்டம் கூடுதல் சலுகைகள் கொண்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

2874 ரூபாய் திட்டம்

இந்த திட்டம் ஒரு நாளைக்கு 2GB டேட்டா, 100 SMS வசதி, 730GB மொத்த டேட்டா, Jio Apps என 365 நாட்களுக்கு வேலிடிட்டி கொண்டுள்ளது.

2545 ரூபாய் திட்டம்

இந்த திட்டம் ஒரு நாளைக்கு 1.5GB டேட்டா சேவை, ஒரு நாளைக்கு 100SMS வசதி, 504GB டேட்டா போன்றவை 336 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளன. புத்தாண்டு காரணமாக பல டெலிகாம் நிறுவனங்கள் புது புது சலுகைகள் கொண்டுள்ளன. அதில் ஜியோ நிறுவனம் தற்போது புதிய ஒரு வருட திட்டத்தில் சலுகை அறிவித்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ்ல் ‘சமயம் தமிழ்’ இணையதளத்தை பின் தொடருங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.