சென்னை: கிறிஸ்துமஸ் பெருவிழாவை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். கிறிஸ்துமஸ் பெருவிழாவை மகிழ்ச்சியோடும், ஏற்றத்தோடும் கொண்டாடும் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார். சமத்துவம், சகோதரத்துவம், ஈகை ஆகிய மனிதநேய பண்புகளின் விழாவாக அன்பை பரிமாறி உதவும் திருநாள் எனவும் கூறியுள்ளார்.