தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பகுதியில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த 8 பேர் விபத்தில் பலியான சம்பவம் ஆண்டிபட்டி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 22ஆம் தேதி அன்று வியாழக்கிழமை காலையில் ஆண்டிபட்டி பகுதியில் உள்ள கோவிலில் இருந்து பத்து ஐயப்பன் பக்தர்கள் சபரிமலைக்கு சென்றனர். 23ஆம் தேதி காலை சாமி தரிசனம் முடித்து மாலையில் குமுளி வழியாக ஆண்டிபட்டிக்கு வந்து கொண்டிருந்தனர். குமுளி மலைப் பாதையில் 23ஆம் தேதி நேற்று இரவு 11 மணிக்கு கார் வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் 40 அடி பள்ளத்தில் கவிழ்ந்து 7 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். ஒருவர் தேனி அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
விபத்தில் இறந்தவர்கள்:
சக்கம்பட்டியைச் சேர்ந்த முனியாண்டி (மற்றும்) தேவதாஸ் ,
ஆண்டிபட்டியைச் சேர்ந்த நாகராஜ் (மற்றும்) சிவக்குமார் .
மறவபட்டி சேர்ந்த கன்னிச்சாமி ,
எஸ் எஸ் புரத்தை சேர்ந்த வினோத் ,
பிச்சை பட்டியலைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் கார் ஓட்டுநர்,
பொம்மிநாயக்கன்பட்டியைச் சேர்ந்த கலைச்செல்வன் உள்ளிட்ட 8 பேரின் உறவினர்கள் அடையாளம் காண்பித்து காவல்துறையினர் உறுதி செய்தனர். அங்கு வந்த இறந்தவரின் உறவினர்கள் இறந்தவர்கள் உடலை பார்த்து கதறிகளும் காட்சியை அங்கு உள்ள அனைவரையும் கண் கலங்க வைத்தது.
விபத்தில் காயம் பட்டவர்கள்:
நாச்சியார்புரம் சேர்ந்தவர் ராஜா மற்றும் ஆண்டிபட்டி சேர்ந்த 7 வயது சிறுவன் ஹரிஹரன், இருவரும் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து தகவல் அறிந்து தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் முரளிதரன் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சை பெற்று வருவர்களுக்கு ஆறுதல் கூறியும் விபத்தில் இறந்தவர் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்தார். எட்டு பேர் உயிரிழந்த இச்சம்பவம் ஆண்டிபட்டி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.