திருமலை: திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 2023ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி புத்தாண்டு மற்றும் 2ம் தேதி முதல் 11ம் தேதி வரை வைகுண்ட வாயில் வழியாக பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். இந்த 11 நாட்களுக்கு ஒரு நாளைக்கு 20 ஆயிரம் டிக்கெட்டுகள் என மொத்தம் 2 லட்சத்து 20 ஆயிரம் டிக்கெட்டுகள் டிசம்பர் 24ம் தேதி (இன்று) காலை 9 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது. இந்த சிறப்பு நுழைவு தரிசனம் டிக்கெட் விலை ரூ.300.