டெல்லி: பாஜக எவ்வளவு முயற்சி செய்தாலும் பாரத் ஜோடோ யாத்திரையை நிறுத்த மாட்டோம் என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது. செப்7-ல் குமரியில் ராகுல் தலைமையில் தொடங்கிய யாத்திரை கேரளா, கர்நாடகா, ம.பி., ராஜஸ்தானை கடந்து நடைபெற்று வருகிறது. குமரி முதல் காஷ்மீர் வரை 3,500 கி.மீ. பாத யாத்திரையாக செல்லும் இந்த பயணம் 150 நாட்கள் நடைபெறுகிறது. கொரோனா பரவல் காரணமாக யாத்திரையை நிறுத்தும்படி ராகுல்காந்திக்கு ஒன்றிய அமைச்சர் மன்சுக் கடிதம் எழுதியுள்ளார்.