புதிய தலைமுறை மாருதி டிசையர் காரினை 2018 ஆம் ஆண்டில் விற்பனைக்கு கொண்டு வர மாருதி சுசூகி திட்டமிட்டுள்ளது. ஆனால் முன்பு 2019 ஆம் ஆண்டில் கொண்டு வர திட்டமிட்டிருந்தது.
இந்திய சந்தையில் நிலவும் கடுமையான போட்டியால் தன் போட்டியாளர்களுடன் ஈடுகொடுக்கும் வகையிலான புதிய தலைமுறை டிசையர் காரை 2019 ஆண்டில் திட்டமிட்டருந்த மாடலை 2017 ஆம் ஆண்டின் இறுதியிலோ அல்லது 2018 ஆம் ஆண்டின் தொடக்கத்திலோ விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது.
அமேஸ் , ஃபிகோ ஆஸ்பயர் , எக்ஸ்சென்ட் போன்ற மாடல்கள் டிசையர் காருக்கு மிகுந்த சவாலினை ஏற்படுத்தி வருவதனால் அவைகளுடன் போட்டி போடும் வகையிலும் வரவுள்ள புதிய போட்டியாளர்களுக்கு இணையாக டிசையர் காரினை வலுப்படுத்த வேண்டி கட்டாயத்தில் மாருதி உள்ளது.
2020 ஆம் ஆண்டிற்குள் ஆண்டுக்கு 20 லட்சம் கார்களை மாருதி விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதால் ஸ்விஃப்ட் , டிசையர் , எர்டிகா போன்ற மாடல்களை முக்கிய மாடல்களாக நிலை நிறுத்த வேண்டிய இந்திய வாகன பாதுகாப்பு விதிகளுக்கு ஏற்றபடி சிறப்பான பாதுகாப்பு மற்றும் நவீன அம்சங்கள் போன்றவற்றை பெற்ற மாடல்களாக இருக்கும்.
இனி வரும் காலங்களில் மாருதி சுசூகி நிறுவனம் ஃபியட் என்ஜின்களை பயன்படுத்துவதனை குறைக்க திட்டமிட்டுள்ளதால் புதிய 1.5 லிட்டர் டீசல் என்ஜின்கள் பொருத்த வாய்ப்புகள் உள்ளது.