இந்தியாவில் புதிய தலைமுறை மாருதி சுஸூகி ஸ்விஃப்ட் காரின் பவர்ஃபுல்லான ஸ்விஃப்ட் ஸ்போர்ட் மாடல் விற்பனைக்கு வருவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளது. மாருதி ஸ்விஃப்ட் கார் அக்டோபர் 2017ல் விற்பனைக்கு வரலாம்.
வளர்ந்து வரும் இந்திய வாகன சந்தையில் சக்திமிக்க கார்களின் விற்பனை கணிசமாக உயர்ந்து வருகின்ற நிலையில் பவர்ஃபுல்லலான முதல் காராக மாருதி நிறுவனம் பலேனோ ஆர்எஸ் மாடலை வருகின்ற பிப்ரவரி 2017ல் அறிமுகம் செய்ய உள்ள நிலையில் அதனை தொடர்ந்து ஸ்விஃப்ட் ஸ்போர்ட் மாடல் சந்தைக்கு வரவுள்ளது.
புதிய ஸ்விஃப்ட் கார்
ஜப்பானிய சந்தையில் வெளியிடப்பட்டுள்ள சுசூகி ஸ்விஃப்ட் காரின் தோற்ற அமைப்பு முற்றிலும் மேப்படுத்தப்பட்டு ஸ்டைலிசான அம்சங்களுடன் விளங்குகின்றது. இன்டிரியர் அமைப்பிலும் புதிய தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் . ஆண்ட்ராய்டு ஆட்டோ , ஆப்பிள் கார்பிளே வசதிகள் , நேவிகேஷன் , யூஎஸ்பி , புளூடூத் என பலவற்றை பெற்றுள்ளது. இந்திய சந்தையில் மாருதி ஸ்விஃப்ட் காரில் இடம்பெற்றுள்ள 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் 1.3லிட்டர்டீசல் அல்லது புதிய 1.5 லிட்டர் டீசல் என்ஜின் இடம்பெற வாய்ப்புகள் உள்ளது. 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனுடன் ஏஎம்டி கியர்பாக்ஸ் கூடுதலாக கிடைக்கும்.
பலேனோ காரில் இடம்பெற உள்ள 1.0 லிட்டர் பூஸ்டர்ஜெட் என்ஜினுக்கு மாற்றாக பொருத்தப்பட உள்ள 1.4 லிட்டர் பூஸ்டர்ஜெட் பெட்ரோல் என்ஜின் அதிகபட்சமாக 140 ஹெச்பி பவரை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
விற்பனையில் உள்ள அபாரத் புன்ட்டோ மற்றும் ஃபோக்ஸ்வேகன் ஜிடிஐ மாடல்களுக்கு கடுமையான சவாலாக மாருதி சுசூகி ஸ்விஃப்ட் ஸ்போர்ட் அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
தகவல் உதவி – autocarindia