மும்பை,மஹாராஷ்டிராவில் போலீசாருக்கும், நக்சல்களுக்கும் இடையே நேற்று நடந்த சண்டையில், ஒரு பெண் நக்சல் உட்பட இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
மஹாராஷ்டிராவில், முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா அதிருப்திக் குழு – பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, சத்தீஸ்கர் மாநில எல்லையை ஒட்டியுள்ள வனப்பகுதியில் நக்சல்கள் பதுங்கியிருப்பதாக, பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அப்பகுதியில் போலீசார் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது, தமச்சா கிராமத்தில் அஹேரி என்ற இடத்தில் மறைத்திருந்த நக்சல்கள், போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.
போலீசார் நடத்திய பதிலடியில், ஒரு பெண் நக்சல் உட்பட இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர். பின், அங்கு நடந்த தேடுதல் வேட்டையில் ஏராளமான ஆயுதங்களையும் கைப்பற்றினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement