மகளை கர்ப்பமாக்கிய தந்தைக்கு 31 ஆண்டு| Father who impregnated his daughter 31 years

இடுக்கி, கேரளாவில் சொந்த மகளை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய தந்தைக்கு, அம்மாநில நீதிமன்றம் ௩௧ ஆண்டு சிறைத் தண்டனை விதித்து நேற்று தீர்ப்பளித்தது.

கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்கு, இடுக்கி மாவட்டம் கொன்னதாடி கிராமத்தைச் சேர்ந்த ஒருவர், ௨௦௧௬ல் தன் சொந்த மகளை தினமும் பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். அப்போது ௧௪ வயதில் இருந்த அந்த சிறுமி கர்ப்பமடைந்தார்.

இதையடுத்து தரப்பட்ட புகாரின் அடிப்படையில், தந்தை மீது, ‘போக்சோ’ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டு, நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டது. இதில், பாதிக்கப்பட்ட சிறுமியும், அவரது தாயும், குற்றவாளிக்கு சாதகமாக அறிக்கை அளித்தனர்.

ஆனால், சிறுமிக்கு ‘அபார்ஷன்’ செய்யப்பட்ட கருவில் மரபணு சோதனை செய்யப்பட்டதில், அது தந்தையின் ரத்த மாதிரியோடு ஒத்துப்போனது. இதனால், மகளின் கர்ப்பத்துக்கு, சொந்த தந்தையே காரணம் என உறுதிப்படுத்தப்பட்டது.

இதையடுத்து, சொந்த மகளையே கர்ப்பமாக்கியது படுகேவலமான செயல் என்றும், அவருக்கு கருணை காட்ட முடியாது என்றும் கூறிய விரைவு நீதிமன்ற நீதிபதி வர்கீஸ், அவருக்கு ௩௧ ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தார்.

அதோடு, ௭௫ ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார். இந்த ௭௫ ஆயிரம் ரூபாயில், ௫௦ ஆயிரம் ரூபாய், பாதிக்கப்பட்ட சிறுமியின் சிகிச்சைக்காக வழங்க உத்தரவிடப்பட்டது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.