ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 ரெட்டிச் வரிசை அறிமுகம்

ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் பிறப்பிடமாக கருதப்படும் இங்கிலாந்தில் அமைந்துள்ள ரெட்டிச் பகுதியை நினைவுப்படுத்தும் வகையில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 புல்லட்டில் மூன்று ரெட்டிச் வண்ணங்கள் சேர்க்கப்பட்டுள்ளது.

ரெட்டிச்

1939 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட ராயல் என்ஃபீலடு நிறுவனத்தின் முதல் உற்பத்தி இடமாக விளங்கும் ரெட்டிச் பகுதியில் முதன்முறையாக 125சிசி மோட்டார்சைக்கிள் ராயல் பேபி மாடலின் ப்ரோட்டைப் தயாரிக்கப்பட்டது. மேலும் 1950 ஆம் ஆண்டுகளில் வெளிவந்த பைக்குகளில் அடர்நிறங்களே பெரும்பாலும் பயன்படுத்தப்பட்ட வந்ததை நினைவுப்படுத்தும் வகையில் ரெட்டிச் சிவப்பு , ரெட்டிச் பச்சை மற்றும் ரெட்டிச் நீலம் என மூன்று வண்ணங்களை பெற்ற ராயல் என்ஃபீல்ட் கிளாசிக் 350 பைக்குகள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஆர்இ கிளாசிக் 350 விபரம்

ரெட்டிச் வரிசை கிளாசிக் 350 பைக்கில் நிறங்களை தவிர எவ்விதமான மாற்றங்களும் இல்லாமல் இந்த புல்லட் மாடலில் இடம்பெற்றுள்ள 346சிசி ஏர்கூல்டு எஞ்சின் அதிகபட்சமாக 19.8 பிஹெச்பி பவரையும், 28 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். இதில் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டுள்ளது.

இந்த பைக்கின் முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள் பின்புறத்தில் கேஸ் சார்ஜ்டு சாக் அப்சார்பர்கள் இடம்பெற்று முன்பக்க டயரில் 240மிமீ டிஸ்க் பிரேக் மற்றும் பின்புற டயரில் 130மிமீ டிரம் பிரேக் இடம்பெற்றுள்ளது.

ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 விலை பட்டியல்

RE Classic 350 Redditch –  ரூ. 147,831 (சென்னை ஆன்-ரோடு)

ரெட்டிச் கிளாசிக் 350 படங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.