விமான சேவையில் குளறுபடியா? பயணியருக்கு இனி இழப்பீடு உண்டு!| Airline disruption? Passengers now have compensation!

புதுடில்லி:விமான பயணத்தின் போது, ஏற்கனவே முன்பதிவு செய்திருந்த உயர் வகுப்புக்கு பதிலாக, சாதாரண வகுப்பை மாற்றிக் கொடுத்தால், சம்பந்தப்பட்ட விமான நிறுவனங்கள் பயணிக்கு இனி இழப்பீடு செலுத்த வேண்டும். இந்த புதிய விதிமுறை அடுத்தாண்டு பிப்ரவரி முதல் அமலுக்கு வருகிறது.

புதிய விதிமுறை

விமான பயணங்களின் போது, உயர் வகுப்புக்கான டிக்கெட் பதிவு செய்திருந்த பயணியருக்கு சில நேரங்களில், அதை சாதாரண வகுப்புக்கு சம்பந்தபட்ட விமான நிறுவனங்கள் மாற்றுவது உண்டு.

அதிக முன்பதிவு, விமானம் மாற்றம், ஊழியர்களால் சேவை செய்ய முடியாத இடத்தில் இருக்கை வசதி இருப்பது போன்ற காரணங்களால், இதுபோன்ற குளறுபடிகள் அதிகம் நடப்பதாக அதிக அளவில் புகார்கள் வந்தன.

கடைசி நேரத்தில் இதுபோன்ற குளறுபடிகள் நிகழ்வதால், பயணியரால் எதுவும் செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது.

இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் உள்நாட்டு விமான போக்குவரத்து இயக்குனரகம் புதிய விதிமுறைகளை உருவாக்கியுள்ளது.

இதன்படி, உயர் வகுப்பு டிக்கெட் பதிவு செய்திருந்த பயணிக்கு, சாதாரண வகுப்பில் இடம் ஒதுக்கினால், சம்பந்தப்பட்ட விமான நிறுவனம், அந்த பயணிக்கு இழப்பீடு அளிக்க வேண்டும். வரி உட்பட டிக்கெட்டுக்கான முழு கட்டணத்தையும் இழப்பீடாக கொடுக்க வேண்டும்.

கருத்து கேட்பு

மேலும், அந்த பயணிக்கு விமானத்தில் வேறு எந்த வகுப்பில் இடம் உள்ளதோ, அந்த வகுப்பில் இலவசமாக பயணிக்கவும் அனுமதிக்க வேண்டும்.

இது குறித்து விமான நிறுவனங்களிடம், விமான போக்குவரத்து இயக்குனரகம் கருத்துக்களை கேட்டுள்ளது. இந்த புதிய விதிமுறை, அடுத்தாண்டு பிப்ரவரி முதல் நடைமுறைக்கு வரும் என தெரிகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.