வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் விமான பயணிகளுக்கு கரோனா பரிசோதனை

புதுடெல்லி: சிவில் விமான போக்குவரத்துத் துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:

வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளில் ரேண்டமாக 2 சதவீத பயணிகளை விமான நிலையங்களில் உள்ள பரிசோதனை மையங்களுக்கு அழைத்து வரவேண்டும் என்று விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.

விமான நிறுவனங்கள் அந்தந்த விமான நிலையங்களில், வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளில் ரேண்டமாக தேர்ந்தெடுக்கப்படும் 2 சதவீதம் பேருக்கு பரிசோதனை செய்வதற்கான வசதிகளை ஏற்படுத்தியிருக்க வேண்டும்.

ரேண்டம் மாதிரி சோதனை முடிந்த பின்னர், சம்பந்தப்பட்ட பயணிகளின் உண்மையான தொடர்பு எண், முகவரியை விமான நிலைய சுகாதார அதிகாரிகள் மற்றும் விமான நிலைய அதிகாரிகளிடம் தரவேண்டும்.

இந்தச் சோதனைக்கான கட்டணம் முறையாக சான்றளிப்பட்ட ரசீதுகள் வழங்கப்பட்ட பின்னர் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தால் விமான நிலைய சுகாதாரத் துறைக்கு திருப்பி அளிக்கப்படும். எந்த ஒரு பயணிக்காவது கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டால், அவர்களின் மாதிரி, மரபணு சோதனைக்காக நியமிக்கப்பட்ட தொற்றுநோய் ஆய்வகத்திற்கு (இன்சாகாக் ஆய்வகம்) அனுப்பி வைக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.