Boat Wave electra: 2000 ரூபாய்க்கு Bluetooth Calling வசதியா?

இந்தியாவில் முன்னணி எலக்ட்ரானிக்ஸ் நிறுவனங்களில் ஒன்றான Boat நிறுவனம் புதிய ஸ்மார்ட் வாட்ச் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட் வாட்ச் ‘Wave Electra’ என்று அழைக்கப்படுகிறது. இதில் கணக்கில் அடங்காத பல வசதிகள் இடம்பெற்றுள்ளன.

இந்த புதிய ஸ்மார்ட் வாட்ச் 2000 ரூபாய்க்கு அறிமுகம் ஆகியுள்ளது. இந்த ஸ்மார்ட் வாட்ச் பட்ஜெட் விலையில் வெளியானாலும் இதன் வசதிகள் அதிகம். குறிப்பாக மிட் ரேஞ்சு ஸ்மார்ட் வாட்ச்களில் மட்டுமே இருக்கும் ப்ளூடூத் காலிங் வசதி இப்போது இந்த வாட்சில் இடம்பெற்றுள்ளது. தற்போது Boat நிறுவனம் இந்தியாவில் 30க்கும் மேற்பட்ட ஸ்மார்ட் வாட்ச் விற்பனை செய்கிறது. அதில் இந்த வாட்ச் என்ட்ரி லெவல் செக்மென்ட்டில் இடம்பெறுகிறது.

விலை விவரம் (Boat Wave electra Price)

இந்த வாட்ச்
1799 ஆயிரம் ரூபாய்க்கு
விற்பனை செய்யப்படுகிறது. இதை நாம் Boat நிறுவனத்தின் அதிகாரபூர்வ இணையதளம் அல்லது Amazon ஆன்லைன் ஷாப்பிங் ஆகிய தளங்களில் வாங்கலாம். இதில் நமக்கு சரும பாதிப்பு ஏற்படாத சிலிக்கான் ஸ்ட்ராப் கூடுதலாக கிடைக்கிறது. அது
Light blue, Blue, Black மற்றும் Cherry Blossom
ஆகிய கலர் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

ஸ்மார்ட் வாட்ச் விவரங்கள் (Boat Wave Smartwatch Specifications)

இந்த வாட்ச் 1.81 இன்ச் HD டிஸ்பிலே, 550 நிட்ஸ் பிரைட்னஸ் அளவு, 100க்கும் அதிகமான டிஸ்பிலே ஆப்ஷன்கள், விட்ஜெட், இரண்டு வகை மெனு ஆப்ஷன், ப்ளூடூத் சிப், ப்ளூடூத் கனெக்டிவிட்டி, காலிங் வசதி, 50 காண்டாக்ட் சேமிப்பு வசதி, HD மைக் மற்றும் ஸ்பீக்கர் வசதி போன்ற சிறப்பு வசதிகள் இடம்பெற்றுள்ளன.

இதனுடன் Google assistant அல்லது SIRI ஆகியவற்றையும் நாம் பயன்படுத்தலாம். இதில் மியூசிக் கண்ட்ரோல், 100க்கும் மேற்பட்ட ஸ்போர்ட்ஸ் மோட், ஹார்ட் ரெட், ஸ்லீப் மானிட்டர், SPO2 போன்ற ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட வசதிகளும் உள்ளன. இது எல்லாம் இருந்தாலும் மொத்தமாக 7 நாட்கள் வரை இதன் பேட்டரி நீடிக்கும்.

செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ்ல் ‘சமயம் தமிழ்’ இணையதளத்தை பின் தொடருங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.