விஜய்யின் ‘வாரிசு’ பட ரிலீசுக்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான ‘பீஸ்ட்’ படம் நெகட்டிவ் விமர்சனங்களை குவித்ததால், அவர் தற்போது நடித்து முடித்துள்ள ‘வாரிசு’ படத்தை அதிகம் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் ரசிகர்கள். இந்நிலையில் இன்று ‘வாரிசு’ படத்தின் ஆடியோ லான்ச் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது.
‘வாரிசு’ படத்தினை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் தில் ராஜு தயாரித்துள்ளார் . இதன் படப்பிடிப்பு சென்னை, ஐதராபாத் உள்ளிட்ட இடங்களில் நடந்து முடிந்த நிலையில் தற்போது இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்தப்படத்தில் சரத்குமார், பிரபு, ஷாம், ஸ்ரீகாந்த், பிரகாஷ் ராஜ், சங்கீதா, சம்யுக்தா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களே விஜய்யுடன் இணைந்து நடித்துள்ளனர்.
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
‘வாரிசு’ படத்தின் முதல் சிங்கிளாக ‘ரஞ்சிதமே’ பாடல் அண்மையில் வெளியானது. விவேக் எழுதிய இந்தப்பாடலை விஜய் பாடியிருந்தார். அதனை தொடர்ந்து ‘வாரிசு’ படத்தின் இரண்டாவது சிங்கிளாக ‘தீ தளபதி’ பாடல் வெளியானது. தமன் இசையில் சிம்பு இந்தப்பாடலை பாடியிருந்தார். ‘ரஞ்சிதமே’ பாடலை விட இந்தப்பாடல் பட்டித்தொட்டி எங்கும் பட்டையை கிளப்பியது.
அண்மையில் அம்மா சென்டிமென்டில் பாடல் ஒன்று வெளியானது. தமன் இசையில் கே.எஸ். சித்ரா பாடிய இந்தபாடல் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இன்று ‘வாரிசு’ படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் கடந்த சில நாட்களாகவே நேரு உள்விளையாட்டு அரங்கில் அமோக நடந்தது.
Breaking: மற்றுமொரு ‘வெண்ணிலா கபடி குழு’ பட நடிகர் மரணம்: ரசிகர்கள் அதிர்ச்சி.!
இந்நிலையில் ‘வாரிசு’ படத்தின் பாடல்கள் குறித்து தமன் பேசியுள்ள வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், ‘வாரிசு’ படத்தில் மொத்தமாக 5 பாடல்கள் உள்ளது. முன்னதாக 3 பாடல்கள் வெளியான நிலையில் இசை வெளியீட்டு விழாவில் மீதம் உள்ள 2 பாடல்கள் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளார்.
VJ Archana: ஊர் வாயை அடைக்க முடியாது: வைரமுத்து பற்றிய சர்ச்சைகளுக்கு அர்ச்சனாவின் பதிலடி.!
மேலும் படத்தில் உள்ள 5 பாடல்களில் ஒரு பாட்டு ரசிகர்களை சீட்டில் இருந்து எழுந்து ஆடவைக்கு அளவிற்கு இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் செம வைரலாகி வருகிறது. அத்துடன் இன்று நடைபெறும் இசை வெளியீட்டு விழாவில் அனிருத் லைவ்வில் பாடவுள்ளதாக கூறப்படுகிறது. ’மாஸ்டர்’ படத்திற்கு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு விஜய் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.