இந்தியாவில் கொரோனா மருந்து தட்டுப்பாடு? முக்கிய ஆலோசனை!

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டாவியா மருந்து நிறுவனங்களுடன் ஆலோசனை நடத்தினார்.

சீனாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதற்கு ஒமைக்ரானின் மாறுபாடான பி.எப்.7 என்ற வைரஸ் காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வகை கொரோனாவால் இந்தியாவில் 4 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் வைரஸ் பரவலை தடுக்க இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் இன்று மத்திய சுகாதரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா மருந்து நிறுவனங்களுடன் ஆலோசனை நடத்தினார்.

அதில்,சூழ்நிலையை உன்னிப்பாகக் கண்காணிக்கவும், கொரோனா மருந்துகள் உட்பட அனைத்து மருந்துகளின் போதுமான இருப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும் மன்சுக் மான்டவியா மருந்து நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

newstm.in

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.