வெளிநாடுகளில் கல்வி கற்பதற்காக மாணவர்களை அனுப்புவதாக நிதி மோசடியில்
ஈடுபட்ட மாரா ஸ்ரடிஸ் அப்ரோட் என்ற நிறுவனத்தை அதிகாரிகள்
சுற்றிவளைத்துள்ளார்கள்.
இந்த நிறுவனத்தை நடத்திச் சென்றவர்கள் மாணவர்களிடம்
பல இலட்சம் ரூபாவை மோசடி செய்துள்ளமை தெரிய வந்துள்ளது.
இதற்கு மேலதிகமாக
துருக்கி, போலந்து ஆகிய நாடுகளில் தொழில் தருவதாக கூறி இந்த நிறுவனம்
பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு
பணியகம் அறிவித்துள்ளது.