புதுடெல்லி: ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக இன்று ட்விட்டர் தளம் முடக்கப்பட்டதால் பயனர்கள் கடும் சிரத்திற்கு ஆளாகினர். சமூக ஊடக தளமான ட்விட்டர், இன்று காலை முடங்கியது. அதனால் அனைத்து பயனர்களும் ட்விட்டர் தளத்திற்குள் நுழைவதில் சிக்கல்களை எதிர்கொண்டனர். ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக ட்விட்டர் முடக்கப்பட்டுள்ளது. கடந்த 11ம் தேதி ட்விட்டர் தளம் ஏற்கனவே முடக்கப்பட்டு, பின்னர் மீட்டெடுக்கப்பட்டது.
இன்று காலை 7.30 மணியளவில் 8,700 பயனர்கள் தாங்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்து அதனை புகாராக ட்விட்டருக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் அடுத்த சில மணி நேரங்களுக்கு பின்னர் வழக்கம் போல் ட்விட்டர் தளம் செயல்பாட்டுக்கு வந்தது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க், ட்விட்டர் தளத்தை விலைக்கு வாங்கியதில் இருந்தே, அந்த நிறுவனம் பல்வேறு பிரச்னைகளை எதிர்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.