கடந்த ஆண்டில் சாலை விபத்துக்களில் 1.53 லட்சம் பேர் பலி

புதுடெல்லி: ஒன்றிய சாலை போக்குவரத்து அமைச்சகம் ‘இந்தியாவில் சாலை விபத்து-2021’ என்ற  தலைப்பில் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;

* 2021ம் ஆண்டில் 4,12,432 சாலை விபத்துக்கள்  நிகழ்ந்துள்ளன.

* விபத்துக்களில் 1,53,972 பேர் இறந்துள்ளனர். 3,84,448 பேர் காயமடைந்துள்ளனர்.

* ஹெல்மெட் அணியாததால் 46,593 பேர் இறந்துள்ளனர். இதில் 32,877 பேர் ஓட்டுனர்கள். 13,716 பின்னால் அமர்ந்து பயணம் செய்தவர்கள். 93,763 பேர் காயமடைந்துள்ளனர்.

* சீட் பெல்ட் அணியாமல் பயணித்த 16,397 பேர் உயிரிழந்துள்ளனர். 39,231 பேர் காயமடைந்துள்ளனர்.

* செப்டம்பர் 4ம் தேதி மகாராஷ்டிராவில் நடந்த சாலை விபத்தில் டாடா சன்ஸ் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்ட்ரி சீட் பெல்ட் அணியாததால் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.