பிரித்தானியாவுக்கு வரும் சீன பயணிகளுக்கு என புதிய விதி அமுலுக்கு கொண்டுவரப்படும் என்று அரசாங்கம் உறுதி செய்துள்ளது.
கலக்கமடைந்துள்ள உலக நாடுகள்
சீனாவில் தீவிரமாக பரவும் புதிய கொரோனா தொற்றால் தற்போது உலக நாடுகள் கலக்கமடைந்துள்ளன.
2020 ஜனவரி மாதம் லூனார் புத்தாண்டு விடுமுறையை கொண்டாடும் பொருட்டு, ஐரோப்பா உள்ளிட்ட உலக நாடுகளுக்கு படையெடுத்த சீன பயணிகளால் ஏற்பட்ட இழப்புகளில் இருந்து இதுவரை உலக நாடுகள் மீளவில்லை என்றே கூறுகின்றனர்.
@AP
இந்த நிலையில், சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகள் என அனைத்தும் தளர்த்தப்பட்ட நிலையில், 2023 ஜனவரியில் மீண்டும் லூனார் புத்தாண்டு விடுமுறையை கொண்டாடும் வகையில் சீன மக்கள் உலக நாடுகளுக்கு படையெடுக்க உள்ளனர்.
ஆனால், சீனாவில் தற்போதைய நிலையை கருத்தில்கொண்டு அமெரிக்கா, இத்தாலி, இந்தியா, தைவான், தென் கொரியா, மலேசியா மற்றும் ஜப்பான் நாடுகள் சீன பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
சீனா விவகாரம் ஆய்வு கட்டத்தில்
இதனிடையே, சீன பயணிகளுக்கு என புதிதாக எந்த விதிகளையும் அமுலுக்கு கொண்டுவரும் திட்டம் இல்லை என அறிவித்திருந்த பிரித்தானியா,
தற்போது புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
@PA
அதில், சீனா விவகாரம் தொடர்பில் ஆய்வு கட்டத்தில் இருப்பதாகவும், தற்போதைய சூழலில் புதிய விதிகள் தேவை இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளது.
இதையே, பாதுகாப்பு செயலர் பென் வாலஸ் விளக்கமாக குறிப்பிட்டுள்ளதுடன்,
ஒவ்வொரு நாட்டுக்கும் ஒவ்வொரு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதை பிரித்தானியா பின்பற்றும் என்றார்.
மேலும், முழுமையான ஆய்வுக்கு பின்னர் இன்று அல்லது நாளை தெளிவான முடிவுக்கு வரப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.