பீஜிங்,-சீனாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் குறித்து, அந்நாடு உரிய தகவல்களை பகிர்ந்து கொள்ளாததால், தடுப்பு நடவடிக்கைகள் எடுப்பதில் உலக நாடுகள் குழப்பத்தில் உள்ளன.
நம் அண்டை நாடான சீனாவில், கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில், கடந்த மூன்றாண்டுகளாக கடும் கட்டுப்பாடுகள் இருந்தன. இவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதையடுத்து, சீன அரசு இம்மாத துவக்கத்தில் கட்டுப்பாடுகளை விலக்கிக் கொண்டது.
இதைத் தொடர்ந்து அங்கு வைரஸ் பரவல் தீவிரமடைந்துள்ளது. இதன் விளைவாக, வேறு பல நாடுகளிலும் வைரஸ் பரவல் அதிகரிக்க துவங்கியுள்ளது.
சீனாவில், ‘ஒமைக்ரான்’ வகையின் உருமாறிய, ‘பி.எப்., – ௭’ வகை கொரோனா வைரஸ் பரவி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இது குறித்து சீனா எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை. மேலும் அங்கு ஏற்படும் தினசரி பாதிப்பு, சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை போன்றவற்றையும் வெளியிட சீன அரசு மறுத்து வருகிறது.
இது போன்ற எந்த தகவல்களையும் சீனா, உலக சுகாதார அமைப்புக்கு கூட தர மறுத்து வருகிறது.
இதனால், உலக நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க முடியாமல் திணறி வருகின்றன. தற்போதைய நிலையில் இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் உட்பட சில நாடுகள், சீனாவில் இருந்து வரும் பயணியருக்கு கொரோனா பரிசோதனையை கட்டாயமாக்கிஉள்ளன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement