கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உதய நகர் பகுதியில் பெண்ணொருவர் நேற்று (29.12.2022) கடத்தப்பட்டுள்ளார்.
போதைப்பொருள் பாவனை
குறித்த பகுதியை சேர்த்த 22
வயதுடைய பெண் ஒருவரே ஆறு பேர் கொண்ட குழுவால் கடத்தப்பட்டுள்ளார்.
கடத்தப்பட்ட யுவதி, ஆண் ஒருவரை காதலித்து வந்ததாகவும்
குறித்த காதலன் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என தெரிந்த நிலையில் அவரை
திருமணம் செய்ய மறுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் நிலையில் முறைப்பாடு
இதனால் காதலன் யுவதியின் வீட்டுக்குள் புகுந்து தாய் மற்றும் தம்பியை
தாக்கிவிட்டு யுவதியை முச்சக்கர வண்டியில் கடத்தி சென்றுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸ் நிலையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.