திறைசேரி ஒதுக்கீட்டின் கீழ் 10,600 மில்லியன் ரூபா, இந்த ஆண்டில் செயல்படுத்தப்பட்ட 215 திட்டங்களில் கிட்டத்தட்ட 175 திட்டங்கள் முழுமையாக முடிக்கப்பட்டுள்ளன என்று நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
அதன்படி மேலும் 40 திட்டங்களின் பணிகள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த வருடம் நாடு முகம்கொடுத்துள்ள பொருளாதார சூழல் காரணமாக அந்தத் திட்டங்களை முடிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
ஆனால் அந்த 40 திட்டங்களின் பணிகளை அடுத்த ஆண்டுக்குள் முடிக்க விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவிடமிருந்து ஏற்கனவே அறிவுறுத்தல்கள் கிடைத்துள்ளதாக நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
அதன்படி, நகர அபிவிருத்தி அதிகார சபையினால் நடைமுறைப்படுத்தப்பட்ட நூறு நகரங்கள் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் நாட்டின் அனைத்துப் பகுதிகளும் 117 சிறிய மற்றும் நடுத்தர அளவிலான நகர்ப்புற மையங்களை உள்ளடக்கியதுடன் அதில் தேர்ந்தெடுக்கப்பட்ட 116 நகரங்களில் திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. 110 நகரங்களின் பணிகள் தற்போது முழுமையாக முடிவடைந்துள்ளதாக நகர அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
ஒன்பது மாகாணங்களில் திட்டங்களுக்கு திறைசேரியால் ஒதுக்கப்பட்ட பணத்தைப் பயன்படுத்தி பேருந்து நிலையம், மக்கள் கண்காட்சி, பொதுச் சந்தை ஆகியன இவ்வருடம் நடைமுறைப்படுத்துவதற்காக 44 திட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அதில், 29 திட்டங்களின் பணிகள் நிறைவடைந்துள்ளதாக, நகர அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
மேலும் அரச நிறுவனங்களுக்கு திறைசேரி ஒதுக்கீட்டின் கீழ் வழங்கிய ஒதுக்கப்பட்ட பணத்தைப் பயன்படுத்தி 22 திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு, இதன் கீழ் 5 திட்டங்கள் நிறைவடைந்துள்ளதாக நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. மற்றும் நாடு முகம் கொடுத்துள்ள நிதி நெருக்கடியால், 13 திட்டங்களின் பணிகள் மெதுவாக நடந்து வருகின்றன.
பேர வாவியைச் சுற்றி நடைபாதை மற்றும் பொது வசதிகள் அபிவிருத்தித் திட்டத்தின் அத்தியாவசியப் பணிகள் மட்டுமே முடிக்கப்பட்டுள்ளன.
மேலும் அரசியல் தலைமை மற்றும் மக்களின் வேண்டுகோளின் பேரில் ரூ 2452 மில்லியன் செலவில் நிர்மாணங்களை ஆரம்பித்த யாழ்ப்பாண நகர மண்டபம் நிர்மாண வேலைத்திட்டத்தை நிறைவு செய்வதற்கு அதன் கட்டுமான பணிக்காக ரூ 1200 மில்லியன் செலவிடப்பட்டு பணிகள் நிறைவடைந்துள்ளன. முழுவதுமாக நிறைவு செய்வதற்கு 2620 மில்லியன் ரூபா தேவைப்படுவதாக நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
அதற்கு மேலதிகமாக, நகர அபிவிருத்தி அதிகார சபையின் நிதியிலிருந்து 8000 மில்லியன் ரூபாவைப் பயன்படுத்தி செத்சிறிபாய மூன்றாவது கட்டம் உட்பட 7 வேலைத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுத்தப்பட்டு க் கொண்டிருக்கின்றன. அவற்றின் 3 திட்டங்களின் வேலைகள் நிறைவடைந்து ஏனைய வேலைத் திட்டங்கள் குறைந்த முன்னேற்றத்துடன் நடைபெற்றுக் கொண்டு செல்வதற்கு முன்மொழியப்பட்டுள்ளது என்று நகர அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.