புதுக்கோட்டை சம்பவத்தால் பாதித்த சிறுமியின் தாயிடம் தொலைபேசி வாயிலாக ஆறுதல் கூறிய கமல்!

சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் கடந்தும் சமூகத்தில் அவலங்கள் குறையவில்லை என வேதனை தெரிவித்திருக்கும் கமல், சிறுமியின் நலம் குறித்தும் விசாரித்து, பின் மக்களுக்கு நிரந்தர தீர்வாக சுத்திகரிப்பு செய்யப்பட்ட சுத்தமான குடிநீரை வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்து தருவதாக உறுதியளித்தார்.
புதுக்கோட்டை மாவட்டம் முத்துக்காடு ஊராட்சிக்கு உட்பட்ட இறையூர் வேங்கைவயலில் பட்டியலின மக்கள் பயன்படுத்தக்கூடிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மலம் கலக்கப்பட்டு, அந்த நீரை குடித்த சிறுமி பாதிக்கப்பட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரக்கூடிய நிலையில், சிறுமியின் தாயாரிடம் ‌மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு ஆறுதல் தெரிவித்தார்.
image
புதுக்கோட்டை மாவட்டம் முத்துக்காடு ஊராட்சிக்கு உட்பட்ட இறையூர் வேங்கைவயல் பகுதியில் பட்டியலின மக்கள் வசிக்கக்கூடிய பகுதியில் உள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டியில், மனிதக் கழிவை கலந்ததால் அந்த குடிநீரை குடித்து பாதிக்கப்பட்ட சிறுமி கோபிகாஸ்ரீ புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் அந்த சிறுமியின் தாயார் ராஜரெத்தினத்திடம் மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் மூலம், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தொலைபேசி மூலமாக பேசி ஆறுதல் தெரிவித்தார்.
image
மேலும், சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் கடந்தும் இந்த சமுதாயத்தில் நிலவும் அவலங்கள் குறித்து வேதனை தெரிவித்து, சிறுமியின் தாயாரிடம் இந்த செயலுக்கு மன்னிப்பு தெரிவிப்பதாகவும், அதே போல் கோயிலுக்குள் செல்வது நல்ல விசயம்தான், அதைக்காட்டிலும் பாதிக்கப்பட்ட நபர்கள் புகார் அளித்த தைரியத்தை பாராட்டினார்.
image
மற்றும் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் உடல்நலன் குறித்து கேட்டறிந்து, மக்களுக்கு நிரந்தர தீர்வாக சுத்திகரிப்புசெய்யப்பட்ட சுத்தமான குடிநீரை வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்து தருவதாக உறுதியளித்தார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.