பெருங்குடல் புற்றுநோய் பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த பிரேசில் ஜாம்பவான் கால்பந்து வீரர் பீலே மரணமடைந்தார்.
உலகக்கோப்பை நாயகன்
எல்லா காலத்திலும் சிறந்த வீரராக கருதப்படுபவர் பிரேசில் அணியின் முன்னாள் வீரர் பீலே.
மூன்று முறை உலகக்கோப்பை வென்ற சிறப்பு வாய்ந்தவரான பீலே, பெருங்குடல் புற்றுநோய் பாதிப்பினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் பீலே சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.
இந்த செய்தியை The Associated Press உறுதிப்படுத்தியுள்ளது. பீலேவின் இறப்பு செய்தி கால்பந்து உலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.