மருத்துவ கவுன்சிலில் எம்பிபிஎஸ் படிப்பை மட்டுமே பதியலாம்: ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: அரசால் அங்கீகரிக்கப்பட்ட பிஎஸ்சி (சமூக சுகாதாரம்) இளங்கலை பட்டப்படிப்பை முடித்த மனோகரன், மலைச்சாமி மற்றும் பாலு ஆகியோர், தங்களை தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்யக் கோரி விண்ணப்பித்துள்ளனர். இதை ஏற்க மறுத்த மருத்துவ கவுன்சில், பிஎஸ்சி (சமூக சுகாதாரம்) படிப்பை பதிவு செய்ய முடியாது என நிராகரித்தது. இதை ரத்து செய்யவும், தங்களை மருத்துவ கவுன்சிலில் பதிவு ெசய்யுமாறு உத்தரவிடக் கோரியும் ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்தனர்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், ‘மருத்துவ கவுன்சிலில் எம்பிபிஎஸ் பட்டப் படிப்பை மட்டுமே பதிவு செய்ய முடியும். இதர படிப்புகளை பதிவு செய்ய முடியாது என மருத்துவ கவுன்சில் தரப்பில் கூறப்பட்டுள்ளது. மனுதாரர்கள் மிக அதிகமாய் ஆசைப்பட்டுள்ளனர். எம்பிபிஎஸ் மற்றும் அதற்கு மேலான படிப்பிற்கு சமமானதாக நினைக்கின்றனர். அவர்களது கோரிக்கையில் எந்த முகாந்திரமும் இல்லை என்பதால் இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது’ என உத்தரவிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.