30,000 அரச ஊழியர்கள் 31 ஆம் திகதி ஓய்வு – மக்களுக்கான அரச சேவையில எந்த பாதிப்பும் ஏற்படாது
சுமார் 30,000 அரச ஊழியர்கள் நாளை மறுதினம் 31 ஆம் திகதி ஓய்வு பெறவுள்ளனர்.
அவர்களில் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் ஆயுதப்படையினர், நியதிச்சபைகள் மற்றும் கூட்டுத்தாபனங்களின் ஊழியர்கள் இடம்பெற்றுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கும்புர தெரிவித்தார்.
பெருமளவிலான அரச ஊழியர்கள் ஓய்வு பெற்றாலும் பொது மக்களுக்கான அரச சேவையில எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் இராஜாங்க அமைச்சர் மேலும் கூறினார்.
அரச சேவையை மீளாய்வு செய்வதற்காக பிரதமரின் செயலாளர் தலைமையில் குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளதாக அவர்; தெரிவித்தார்.
குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் சில மாற்றங்கள் செய்யப்படும் என்று தெரிவித்த இராஜாங்க அமைச்சர்; ,தேவை ஏற்படும் போது மட்டுமே, நாட்டின் நிலைமையை கருத்தில் கொண்டு, ஆட்சேர்ப்புக்கு அனுமதி வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.