#BREAKING கால்பந்து ஜாம்பவான் பீலே காலமானார்!!

பிரேசில் நாட்டை சேர்ந்த கால்பந்து ஜாம்பவான் பீலே காலமானார். அவருக்கு வயது 82.

இவர் உலகக் கோப்பையை வென்ற பிரேசில் கால்பந்து அணியில் மூன்று முறை இடம்பிடித்தவர். பல விளையாட்டு வீரர்களுக்கு ரோல் மாடலாக திகழ்ந்து வருகிறார். தனது தனித்திறமையால் உச்சத்தை தொட்டவர். இன்றும் மிகச்சிறந்த கால்பந்து வீரராக போற்றப்படுபவர்.

பீலேவுக்கு, பெருங்குடலில் சிறிய புற்றுநோய் கட்டி இருப்பது கண்டறியப்பட்டு கடந்த 2021ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அறுவை சிகிச்சை செய்து அகற்றப்பட்டது. தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த பீலேவின் உடல்நிலை மோசமடைந்தது.

இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருந்தார். இந்நிலையில், பீலேவின் இதயம் மற்றும் சிறுநீரகம் தீவிரமாக பாதிப்பு அடைந்ததாக கூறப்பட்டது.

நுரையீரல், இதய பிரச்னைக்காக சிகிச்சை பெற்ற பீலேவை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். அவர் குணமடைய வேண்டும் என்று உலகம் முழுவதும் பிரார்த்தனை செய்தனர்.

இந்நிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் கால்பந்து ஜாம்பவான் பீலே காலமானார். அவரது மறைவு உலகில் உள்ள அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பல்வேறு தரப்பினரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

newstm.in

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.