பிரேசில் கால்பந்து ஜாம்பவான் பீலேவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இந்திய கால்பந்து சங்கம் அறிவிப்பு ஏழு நாள் துக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது என்று கூறியது.
பிரேசில் கால்பந்து ஜாம்பவான் பீலே புற்றுநோயுடன் நீண்ட காலமாக போராடிவந்த நிலையில் நேற்று இரவு (டிசம்பர் 29) மருத்துவமனையில் உயிரிழந்தார்.
82 வயதில் காலமான பீலே, பல முறை இந்தியாவிற்கு பயணம் செய்துள்ளார். இந்தியாவில் கால்பந்து விளையாட்டை மேம்படுத்தவும் வளர்க்கவும் உதவியுள்ளார்.
ஏழு நாள் துக்கம்
Getty Images
இந்நிலையில், அவரது கால்பந்தாட்ட வாழ்க்கை மற்றும் சாதனைகளை கௌரவிக்கும் வகையில் இந்திய கால்பந்து சங்கம் (AIFF) ஏழு நாள் துக்க அனுசரிப்பை அறிவித்தது.
இந்திய கால்பந்து சங்கம் பீலேவுக்கு உணர்ச்சிபூர்வமான அஞ்சலி செலுத்த இந்த அறிக்கையை வெளியிட்டது.
இந்திய கால்பந்து சங்கம் வெளியிட்ட அறிக்கையில், “டிசம்பர் 29, 2022 அன்று காலமான பிரேசில் கால்பந்து ஜாம்பவான் பீலேவின் வாழ்க்கை மற்றும் சாதனைகளை நினைவுகூரும் வகையில் அகில இந்திய கால்பந்து சம்மேளனம் ஏழு நாள் துக்கம் அறிவித்துள்ளது.”
AIFF declares 7-day mourning for @Pele
Statement 👉 https://t.co/9kwCr1x9kC#IndianFootball ⚽ pic.twitter.com/uXZFkDZphM
— Indian Football Team (@IndianFootball) December 30, 2022
“கால்பந்து உலகின் மன்னருடன் இந்தியாவின் தொடர்பு ஆழமாக உள்ளது; பீலே ஒன்றுக்கு மேற்பட்ட முறை இந்தியாவிற்கு சென்றுள்ளார், அதில் முதன்மையானது 1977-ல் ஈடன் கார்டன் மைதானத்தில் மோஹுன் பாகனுக்கு எதிராக காஸ்மோஸ் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் விளையாடியது. கொல்கத்தா (அப்போது கல்கத்தா),” என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா ஆசிர்வதிக்கப்பட்டுள்ளது
AIFF-ன் செயலாளர் டாக்டர் ஷாஜி பிரபாகரனும் பீலேவுக்கு அஞ்சலி செலுத்தினார். அவர் கூறிகையில், “பீலே பல முறை வந்தது இந்தியாவுக்கு கிடைத்த ஆசீர்வாதம், கடைசியாக 2018-ல் சந்தித்தார். இந்த வருகைகளுக்காக நாங்கள் அனைவரும் அவருக்கு நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். அவர் எப்போதும் இந்திய கால்பந்து வளர்ச்சியடைய வேண்டும், வளர வேண்டும் மற்றும் பிரகாசமான எதிர்காலம் வேண்டும் என்று விரும்பினார். விளையாட்டில் வேறு யாரும் இல்லாத அளவுக்கு ஊக்கமளித்த ஒருவர்.” என தெரிவித்தார்.
பல சாதனைகளை படைத்த ஜாம்பவான் பீலே
பிரேசில் கால்பந்து ஜாம்பவான் சந்தேகத்திற்கு இடமின்றி எல்லா காலத்திலும் சிறந்தவர், வரலாற்றில் மூன்று முறை FIFA உலகக் கோப்பையை வென்ற ஒரே வீரர் ஆவார். பீலே 650 லீக் கோல்கள் மற்றும் 1,281 ஒட்டுமொத்த சீனியர் கோல்களை அடித்ததுடன் பல சாதனைகளை படைத்துள்ளார்.