ஒரு சூடான டீ, இரண்டு சமோசா கிட்டத்தட்ட 500 ரூபாய்

ஒரு கோப்பை சூடான தேநீருடன் இரண்டு மொறுமொறு சமோசாக்கள் இருந்தால் போதும் பலருக்கும் அந்த நாளே அழகானதாக மாறிவிடும். ஏன் இது தான் பல பேரின் காலை டிபன்.. ஆனால், அந்த டீயும் சமோசாவுமே ஒரு துயரத்தைக் கொடுத்திருப்பதாக ஒருவர் பதிவிட்டுள்ளார்.

ஊடகவியலாளர் ஃபராஹ் கான் தனது டிவிட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் ஒரு பதிவையிட்டுள்ளார். அதில், மும்பை விமான நிலையத்தில் ஒரு தேநீர், இரண்டு சமோசா மற்றும் ஒரு குடிநீர் பாட்டில் வாங்கினேன். இதற்கு ரூ.490 விலையாகக் கொடுத்தேன். இரண்டு சமோசாக்களின் விலை ரூ.260 என்றும், ஒரு தேநீர் சூடான இஞ்சி போட்ட தேநீர் விலை ரூ.160 என்றும் அந்தப் புகைப்படத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தப் புகைப்படத்தில் இருக்கும் சமோசாக்களும் மிகச் சாதாரண அளவுள்ள சமோசாக்கள்தான். நாட்டிலேயே ஏழை மக்களும் வாங்கும் அளவுக்கு இப்போதைக்கு இருப்பது இந்த இரண்டு உணவுகள்தான். இவையும் விமான நிலையத்தில் இந்த விலைக்கு விற்கிறது என்றால் என பலரும் தங்களது கருத்துகளை பதிவிட்டுள்ளனர்

இதனை பல லட்சம் பேர் பார்த்து பகிர்ந்து வருகிறார்கள். ஆயிரக்கணக்கானோர் ரீடிவிட் செய்துள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.