நாளை இரவு சென்னையில் கடற்கரைகளில் மணற்பகுதியில் புத்தாண்டு கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
புத்தாண்டு கொண்டாட்டங்கள் தொடர்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது கடற்கரை மணற்பரப்பில் புத்தாண்டு கொண்டாட்டம் தொடர்பாக பொதுமக்களால் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு விளக்கும் அளிக்கும் வகையில் சென்னை மாநகர காவல்துறை பதில் அளித்துள்ளது. அதன்படி, புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு பொதுமக்கள் நலன் மற்றும் பாதுகாப்பை கருத்தில் கொண்டு 31.12.2022 அன்று இரவு 08.00 மணிக்கு மேல் கடற்கரை மணல் பகுதிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை பெருநகர காவல்துறை எல்லைக்குட்பட்ட மெரினா, சாந்தோம், பெசன்ட்நகர் எலியட்ஸ், நீலாங்கரை, பாலவாக்கம், காசிமேடு, திருவொற்றியூர் உள்ளிட்ட அனைத்து கடற்கரை மணற்பகுதிகள் மற்றும் கடற்கரை ஓரங்களில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.
ஆகவே, பொதுமக்கள் 31.12.2022 அன்று இரவு 08.00 மணிக்கு மேல் கடற்கரை மணற்பகுதிக்கு வரவேண்டாம் எனவும், பொதுமக்களின் பாதுகாப்பை கருதி மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு நல்குமாறு பெருநகர காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது.
newstm.in