சர்வதேச போதை பொருள் கடத்தல் மன்னனுக்கு 2 ஆண்டு சிறை

தூத்துக்குடி: தூத்துக்குடி திரேஸ்புரம் முத்தரையர் காலனி கடற்கரை பகுதியில் சுற்றித் திரிந்த இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஜோனாதன் தோர்னை (47) கியூ பிரிவு போலீசார் கடந்த ஆண்டு ஜூலை 11ம் தேதி மடக்கினர். விசாரணையில் அவர் போதை மருந்து கடத்தல் கும்பலின் தலைவன் என்றும் மும்பையில் போதை மருந்து தொழிற்சாலை நடத்தியதும் தெரியவந்தது. அவர் தூத்துக்குடியில் இருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு தப்பிச் செல்ல முயன்றது தெரியவரவே கியூ பிரிவு போலீசார் அவரை கைது செய்தனர். இந்த வழக்கை தூத்துக்குடி முதலாவது ஜேஎம் கோர்ட் மாஜிஸ்திரேட் குபேரசுந்தர் விசாரித்து ஜோனாதர்னுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து நேற்று தீர்ப்பளித்தார். இதையடுத்து அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அவரிடம் பறிமுதல் செய்யப்பட்ட ஐபோன் கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.