கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருந்து சுமார் பன்னிரண்டு பேர் கொண்ட குழுவினர் வேன் ஒன்றில் வேளாங்கண்ணி செல்வதற்காக புறப்பட்டு சென்றனர். இவர்கள் காங்கேயம் அடுத்து கொழிஞ்சி காட்டு வலசு பிரிவு என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது, திருச்சியில் இருந்து கோயம்புத்தூரை நோக்கி எதிரே வந்த லாரியும் இந்த வேனும் நேருக்கு நேர் மோதிக் கொண்டது. இதில், வேன் ஓட்டுநர் பிரதாப் மற்றும் வேனில் பயணம் செய்தவர்களில் நான்கு பேர் பலத்த காயமடைந்தனர்.
இதைப்பார்த்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி, சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த போலீசார் விபத்தில் சிக்கி காயமடைந்த ஐந்து போரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
அதன் பின்னர் போலீசார் இந்த விபத்தில் உயிர் தப்பியவர்களிடம் சம்பவம் குறித்து விசாரணை செய்தனர். மேலும், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். வேணும் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டதுடன், சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது.