பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி காலமானார்

பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடிக்கு உடல்நிலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

அவரது மறைவை உறுதிப்படுத்தியுள்ள பிரதமர், இன்று அதிகாலை உணர்வுப்பூர்வமான ட்வீட் ஒன்றைப் பதிவிட்டுள்ளார். “ஒரு புகழ்பெற்ற நூற்றாண்டு கடவுளின் காலடியில் உள்ளது. அம்மா… ஒரு துறவியின் பயணத்தை உள்ளடக்கிய மும்மூர்த்திகளை நான் எப்போதும் உங்களிடம் உணர்ந்தேன். ஒரு தன்னலமற்ற கர்மயோகி நீங்கள். மதிப்புகளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட வாழ்க்கை உங்களுடையது” என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த ஆண்டு தனது தாயாரின் 100ஆவது பிறந்தநாளையொட்டி அவரைச் சந்தித்ததை பிரதமர் மோடி நினைவுக்கூர்ந்தார். “அவருடைய 100ஆவது பிறந்தநாளில் நான் அவரை சந்தித்தபோது, அவர் ஒரு விஷயத்தைச் சொன்னார். அது எப்போதும் நினைவில் இருக்கிறது, இது புத்திசாலித்தனத்துடன் வேலை செய்யுங்கள், தூய்மையுடன் வாழ்க” என்று பிரதமர் மோடி ட்வீட்டில் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமரின் தாயார் ஹீராபென் மோடி அகமதாபாத்தில் உள்ள யு.என் மேத்தா மருத்துவமனையில் நேற்று முன்தினம் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலையில் முன்னேற்றம் கண்டுள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. பிரதமர் மோடியும் அவரது தாயாரை மருத்துவமனையில் வந்து சந்தித்து உடல்நலம் குறித்து கேட்டறிந்தது குறிப்பிடத்தக்கது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.