மகனிடமிருந்து எதையும் எதிர்பார்க்காத தாய் : பிரதமரின் தாயாருக்கு இளையராஜா புகழஞ்சலி
பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென்(99) இன்று(டிச., 31) காலமானார். அவரது மறைவுக்கு உலக தலைவர்கள், ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, மாநில கவர்னர்கள், முதல்வர்கள், திரைப்பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து, பிரதமருக்கு ஆறுதல் கூறி உள்ளனர். ராஜ்யசபா எம்பியும், இசையமைப்பாளருமான இளையராஜா வெளியிட்ட இரங்கல் செய்தி….
நமது பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் மறைவு செய்தி கேட்டு மிகுந்த துயரமும், வருத்தமும் அடைந்தேன்.
பிரதமரின் தாயாக இருந்தாலும், தன் மகனிடமிருந்து எதையும் எதிர்பார்க்காத தாய்.
எனது தாயாரும் அவ்வாறே!
என்னிடம் எதையும் கேட்டதில்லை. நானும் எதையும் கொடுத்ததில்லை.
இப்படிப்பட்ட அன்னையர்களை உலகில் வேறெங்கு காண முடியுமோ?
அவர் மறைந்தது துயரமே!
நமது பிரதமர் அவர்களின் துயரத்தில் நானும் பங்கு கொள்கிறேன்.
அன்னை ஆத்மா சாந்தியடைய இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்”
இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த்
மதிப்பிற்குரிய பிரதமர் மோடி.. உங்கள் வாழ்வில் ஈடு செய்ய முடியாத இழப்பிற்கு என் இதயப்பூர்வமான இரங்கல்கள்.. அம்மா.
நடிகர் கமல்ஹாசன்
நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன்: ‛‛பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடி மறைந்த செய்தி அறிந்து துயருற்றேன். அவருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். 200 வயதானாலும் தாய் தாய்தான். இழப்பு இழப்புதான்''.