தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் அரசு பொதுவிடுமுறை தினங்கள் பற்றிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன..
இந்நிலையில், 2023 ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் விடுமுறை நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.மொத்தம் 24 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஜனவரி மற்றும் ஏப்ரல் மாதங்களில் அதிகபட்சமாக 5 நாட்கள் பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
24 நாட்கள் விடுமுறை தினங்களாக அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில், அதில், 8 விடுமுறை நாட்கள் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் அமைந்துள்ளது.ஜனவரி மாதத்தில் ஆங்கிலப் புத்தாண்டு தினமான ஞாயிற்றுக்கிழமை, பொங்கல் பண்டிகையையொட்டி, 15, 16, 17 ஆகிய தினங்கள் முறையே ஞாயிறு, திங்கள், செவ்வாய் கிழமைகளில் விடுமுறை என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
- ஆங்கில புத்தாண்டு – ஜனவரி 01, ஞாயிறு
- பொங்கல் – ஜனவரி 15, ஞாயிறு
- திருவள்ளூவர் தினம் – ஜனவரி 16, திங்கள்
- உழவர் திருநாள் – ஜனவரி 17, செவ்வாய்
- குடியரசு தினம் – ஜனவரி 26, வியாழன்
- தைப்பூசம் – பிப்ரவரி 05, ஞாயிறு
- தெலுங்கு வருடபிறப்பு – மார்ச் 22, புதன்
- வங்கிகள் ஆண்டு கணக்கு முடிவு – ஏப்ரல் 01, சனி
- மஹாவீர் ஜெயந்தி – ஏப்ரல் 04, செவ்வாய்
- புனித வெள்ளி – ஏப்ரல் 07, வெள்ளி
- தமிழ் வருட பிறப்பு / அம்பேத்கர் பிறந்த நாள் – ஏப்ரல் 14, வெள்ளி
- ரமலான் – ஏப்ரல் 22, சனி
- உழைப்பாளர் தினம் – மே 01, திங்கள்
- பக்ரீத் – ஜூன் 29, திங்கள்
- மெஹரம் – ஜூலை 29, சனி
- சுதந்திர தினம் – ஆகஸ்ட் 15, செவ்வாய்
- கிருஷ்ண ஜெயந்தி – செப்டம்பர் 06, புதன்
- விநாயகர் சதுர்த்தி – செப்டம்பர் 17, ஞாயிறு
- மிலாடி நபி – செப்டம்பர் 28, வியாழன்
- காந்தி ஜெயந்தி – அக்டோபர் 02, திங்கள்
- ஆயுத பூஜை – அக்டோபர் 23, திங்கள்
- விஜய தஷமி – அக்டோபர் 24, செவ்வாய்
- தீபாவளி – நவம்பர் 12, ஞாயிறு
- கிறிஸ்துமஸ் – டிசம்பர் 25, திங்கள்