காந்திநகர்: அமெரிக்காவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய XBB.1.5என்ற புதிய வகை கொரோனா முதன் முறையாக குஜராத்தில் கண்டறியப்பட்டுள்ளது. அமெரிக்காவின் நியூயார்க்கில் 40% மேல் கடும் பாதிப்பை ஏற்படுத்தியது XBB.1.5 என்கிற புதிய வகை கொரோனா வைரஸ். ஒமிக்ரானின் மற்றொரு உருமாறிய கொரோனா வைரஸாக இந்த XBB.1.5 அறியப்படுகிறது. முந்தைய வகை கொரோனா வைரஸ்களை விடவும் இது 120 மடங்கு வேகத்தில் பரவும் என சொல்லப்படுகிறது.
கொரோனா வேக்சின் மூலம் கிடைத்த தடுப்பாற்றலில் இருந்து இந்த XBB.1.5 வேரியண்ட் எஸ்கேப் ஆகும். மேலும், நமது செல்களுடன் வலுவான பிணைப்பை ஏற்படுத்திக் கொள்ளும் என்பதும் இதை ஆபத்தானதாக மாற்றுவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். கொரோனா வைரஸ் இந்த XBB வேரியண்டுகளை போலத் தொடர்ந்து உருமாறிக் கொண்டே இருப்பது, ஒரு கட்டத்தில் அவை வேக்சின் தடுப்பாற்றலில் இருந்து தப்பிக்கவும் காரணமாக அமைந்துவிடும் என்றும் ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். கொரோனா பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் புதிய வகை XBB.1.5 தொற்று குஜராத்தில் கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து குஜராத் சுகாதாரத்துறை அதிகாரிகள் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.