நெட்ஃபிளிக்ஸ் ஆவணப்படம் வெளியானதைத் தொடர்ந்து, இளவரசர் ஹரி மற்றும் மேகன் மெர்க்கலின் அரச பட்டத்தை பறிக்க வேண்டும் என பெரும்பாலான பிரித்தானிய மக்கள் கருத்துக் கணிப்பில் தெரிவித்துள்ளனர்.
நெட்ஃபிளிக்ஸ் ஆவணப்படம்
சமீபத்தில் வெளியான நெட்ஃபிளிக்ஸ் ஆவணப்படத்தின் ஆறு பாகங்கள், ஹரி மற்றும் மேகனை விட வில்லியம்-கேட்டிற்கு அதிக ஆதரவை பெற்றுத் தந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
மேலும் இதுதொடர்பாக நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பு ஒன்றில், பங்கேற்றவர்களில் 44 சதவீதம் பேர் ஹரி – மேகனின் அரச பட்டத்தை அகற்ற வேண்டும் என்று கூறியுள்ளனர்.
@Pixel8000
இதர 32 சதவீதம் பேர் அதைப் பற்றி கண்டுகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. அதேபோல் 44 சதவீதம் பேர் வில்லியம் – கேட் மீது அனுதாபம் அதிகரித்துள்ளதாகவும், 17 சதவீதம் பேர் மட்டும் ஹரி – மேகனுக்காக இருப்பதாகவும் கூறியுள்ளனர்.
@Harpo Production/Joe Pugliese/Reuters
டாம் க்வின்
இதற்கிடையில், சமீபத்திய தொடர்கள் ஹரி, மேகன் பற்றி மோசமாக சிந்திக்க வைத்ததாக 23 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.
ஆனால், இந்த ஆவணப்படம் Sussexes-கிற்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்பது தனக்கு ஆச்சரியமாக இருப்பதாக ‘Kensington Palace: An Intimate Memoir from Queen Mary to Meghan Markle’ என்ற புத்தகத்தின் ஆசிரியர் டாம் க்வின் தெரிவித்துள்ளார்.
எனினும், மன்னரின் முடிசூட்டு விழாவிற்கு ஹரி – மேகன் ஜோடியை அழைக்க வேண்டும் என்று 51 சதவீத பிரித்தானிய மக்களும், வேண்டாம் என்று 31 சதவீத மக்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.
@Max Mumby/Indigo/Pool/Getty Images