உக்ரேனியர்களை கொல்ல மறுத்த அதிகாரி… ரஷ்யாவில் சித்திரவதைக்கு இரையாகலாம் என மனைவி அச்சம்


விளாடிமிர் புடினின் பாதுகாப்பு சேவையில் பணியாற்றிவந்த அதிகாரி ஒருவர், உக்ரேனிய மக்களை கொல்ல மறுத்து கஜகஸ்தான் தப்பியவரை மீண்டும் ரஷ்யாவுக்கே நாடுகடத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

15 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை

36 வயதான மேஜர் மிகைல் ஜிலின் உக்ரைன் மீதான போருக்கு எதிரான கருத்தை தெரிவித்துள்ளதால், தற்போது அவர் 15 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் சித்திரவதையும் எதிர்கொள்ள இருக்கிறார் என அவரது மனைவி கவலை தெரிவித்துள்ளார்.

உக்ரேனியர்களை கொல்ல மறுத்த அதிகாரி... ரஷ்யாவில் சித்திரவதைக்கு இரையாகலாம் என மனைவி அச்சம் | Officer Refused Kill Ukrainians Fled Kazakhstan

@socialmedia

ரஷ்யாவின் FSO அமைப்பின் அதிகாரியாக பணியாற்றிய மேஜர் மிகைல் ஜிலின், புடினின் பாதுகாப்பு தொடர்பான அனைத்து ரகசியங்களையும் தெரிந்துகொள்ளும் பொறுப்பில் இருந்துள்ளார்.

இந்த நிலையில் நடந்தே கஜகஸ்தான் சென்றவருக்கு அடைக்கலம் அளிக்க அங்குள்ள நிர்வாகம் மறுத்துள்ளதுடன், மேஜர் மிகைல் ஜிலினை மீண்டும் ரஷ்யாவுக்கே நாடுகடத்தவும் முடிவு செய்துள்ளது.

FSO அமைப்பின் அதிகாரியாக செயல்படும் ஒருவர் வெளிநாடு செல்லவோ, கடவுச்சீட்டு வைத்துக்கொள்ளவோ அனுமதி இல்லை.
உக்ரைனுக்கு அனுப்ப இருப்பதாக தகவல் வெளியான நிலையிலேயே அவர் அருகாமையில் உள்ள நாடான கஜகஸ்தானுக்கு நடந்தே சென்றுள்ளார்.

கருணை காட்ட மறுப்பு

போர் தொடர்பில் ஆயிரக்கணக்கான ரஷ்ய மக்களுக்கு அடைக்கலம் அளித்துள்ள கஜகஸ்தான் நிர்வாகம், ஆனால் மேஜர் மிகைல் ஜிலின் தொடர்பில் கருணை காட்ட மறுத்துள்ளது.

உக்ரேனியர்களை கொல்ல மறுத்த அதிகாரி... ரஷ்யாவில் சித்திரவதைக்கு இரையாகலாம் என மனைவி அச்சம் | Officer Refused Kill Ukrainians Fled Kazakhstan

@socialmedia

ரஷ்ய அதிகாரிகளிடம் அவர் ஒப்படைக்கப்பட்ட நிலையில், மாயமாகியுள்ளதாகவும், அவர் சித்திரவதைக்கு உட்படுத்தப்படுவார் அல்லது போர்க்களத்திற்கு அனுப்பப்படுவார் என அவர் மனைவி தெரிவித்துள்ளார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.