தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய கட்சிகளின் செயல்பாடுகள் 2022, 2023 மற்றும் நாடாளுமன்ற தேர்தல் வெற்றி கட்சியின் செயல்பாடுகள் குறித்து மூத்த பத்திரிகையாளர் மணியுடன் ‘புதிய தலைமுறை’ நேர்கானல் நடத்தியது.
அதிலிருந்து சில.
1.ஆளும் கட்சியின் செயல்பாடுகள் 2022-இல் எவ்வாறு இருந்தது?
ஆளும் கட்சி என்ற முறையில் சரியாக இருந்தது. காங்கிரஸ் இடதுசாரிகள் விடுதலை சிறுத்தை கட்சி போன்ற சிறு கட்சிகளை இணைத்துக்கொண்டு சென்றால்தான் வெற்றி பெற முடியும் என்பதை நன்கு தெரிந்து வைத்துள்ளது. ஆளும் கட்சி அதற்கான முன்னேற்பாட்டில் இருக்கின்றனர். இதுவரையில் இடைத்தேர்தல் எதுவும் இல்லாததால் இந்நிலையை தொடரும் என்று நினைக்கிறேன். ஏனெனில் கூட்டணி கட்சியை திருப்திப்படுத்த போதிய பணபலமும் திட்டமும் இவர்களிடம் உள்ளது.
2.திமுகவைப் பொறுத்தவரை இதுவரை நடந்த முக்கிய நடவடிக்கை என்ன?
முக்கிய நடவடிக்கை என்று பார்த்தால் உதயநிதி ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட அமைச்சர் பொறுப்பு, ஆளும் கட்சியின் ஆக்கபூர்வமான முடிவு என்று பார்க்கலாம். இது எதிர்பார்க்கப்பட்ட முடிவு தான். அவருக்கு எப்பொழுது எம்.எல்.ஏ சீட் கிடைத்ததோ, அப்பொழுதே அவர் அமைச்சர் ஆகும் வாய்ப்பு அதிகரித்து உள்ளது. ஆனால் அதை நான் இவ்வளவு சீக்கிரம் எதிர்பார்க்கவில்லை. முடிந்த ஒன்றைப் பற்றி பேசி இனி பயனில்லை. இருந்தாலும், இதைப்பற்றி பேச பாஜகவுக்கு எந்த உரிமையும் இல்லை. வாரிசு அரசியல் பாஜகவில் இல்லாமல் இருந்தாலும், தலைமை பொறுப்பை உறுதி படுத்துவது ஆர்.எஸ்.எஸ் என்ற அமைப்பு. ஆகவே, மக்களுக்கு எந்த விதத்திலும் களப்பாடு இல்லாத, எல்லா அதிகாரத்தையும் முகர்ந்து கொண்டிருக்கின்ற ஆர்.எஸ்.எஸ்ஸின் பின் புலத்தில் இயங்கக்கூடிய பாஜகவிற்கு இது குறித்து கேள்வி எழுப்ப எந்த தார்மீக தகுதியும் இல்லை என்பது எனது கருத்து.
3.உதயநிதி அமைச்சரானது கட்சியின் வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்துகிறதா?
மக்கள் மத்தியில் வாரிசு அரசியல் என்ற முறையில் அதிருப்தி ஏற்பட்டு இருப்பது முற்றிலும் உண்மை தான். இது இளம் வாக்காளரையும் பாதித்து இருக்கிறது. ஆனால் இது நிரந்தரமானது கிடையாது என்பது எனது எண்ணம் . நாட்கள் ஆக…ஆக.. மக்கள் இதை ஏற்றுக்கொண்டு விடுவார்கள். மேலும் , அவர் சர்ச்சையில் எதுவும் சிக்காமல், பொது வாழ்க்கையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டால் கட்சிக்கு ஏதும் அவப்பெயர் வராது. அவர் தனது நல்ல செயல்பாட்டின் மூலமாக மக்கள் மனநிலையை மாற்ற முடியும்.
4.திமுக கட்சியினர் இதை ஏற்றுக் கொண்டார்களா?
கட்சியினரிடையே முணுமுணுப்பு இருந்தாலும் அவர்கள் அதை ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும். மேலும் தேர்தல் வர இன்னும் இரண்டு ஆண்டுகள் இருக்கும் பட்சத்தில் முதல் தேர்தலாக லோக்சபா தேர்தல் வருவதால் மறுபடியும் மோடி வரவேண்டும் அல்லது வேண்டாம் என்ற கேள்வி இருப்பதாலும், இது திமுகவை பாதிக்காது. குறிப்பாக உதயநிதியால் கட்சிக்கு பிளஸ் ஆர் மைனஸ் இருக்காது. மேலும் அவர் கட்சிக்கு நல்ல ஒரு பெர்ஃபார்மன்ஸ் செய்யும் பட்சத்தில் மறுபடியும் திமுக தனது ஓட்டை இழக்காது.
முழு நேர்காணலையும் காண:
<iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/MVwd3VfKs9M” title=”YouTube video player” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture” allowfullscreen></iframe>Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM