கொரோனா காலத்தில் பணியமர்த்தப்பட்ட ஒப்பந்த செவிலியர்களுக்கு நிரந்தர பணி வழங்குமாறு, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், அரசு மருத்துவமனைகளின் காலிப்பணியிடங்களை நிரப்புவதோடு, ஒப்பந்த முறையில் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என திமுகவின் தேர்தல் வாக்குறுதியில் தெரிவிக்கப்பட்டிருந்ததாக சுட்டிகாட்டியுள்ளார்.
இதற்குமுன் பணி நிரந்தரம் கோரி செவிலியர்கள் போராடியபோது, அது குறித்து நடவடிக்கை எடுப்பதாக முதலமைச்சர் கூறிய நிலையில், தற்போது பணிநிரந்தரம் வழங்கப்படாது என அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாகவும் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.
உடனடியாக 6 ஆயிரம் செவிலியர்களுக்கு பணி நிரந்தர ஆணை வழங்க தவறினால், பாஜக போராட்டத்தை முன்னெடுக்கும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.