கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கஞ்சா செடி பயிரிட்டு விற்பனை செய்த விவசாயியை போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை பெரியபலாப்பூண்டி பகுதியில் விவசாயி ஒருவர் கஞ்சா பயிரிட்டு விற்பனை செய்து வருவதாக மத்திய புலனாய்வு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இந்த தகவலையடுத்து மத்திய புலனாய்வு பிரிவு போலீசார் அப்பகுதியில் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்பொழுது பாலகிருஷ்ணன் என்ற விவசாயி அவரது விவசாய நிலத்தில் கஞ்சா செடிகள் பயிரிட்டது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் போலீசார் அவரது வீட்டில் சோதனை செய்ததில் விற்பனைக்காக கஞ்சா மறைத்து வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து போலீசார் அவரிடம் இருந்த எட்டு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் பாலகிருஷ்ணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.